×

ஆந்திராவிற்கு கடத்திய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி துணை வட்டாட்சியர் (பறக்கும் படை) சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் மணி உள்ளிட்டோர் எளாவூர் சோதனைச் சாவடியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை மடக்கியபோது டிரைவர் லாரியை நிறுத்தி ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து வருவாய் துறையினர் அந்த லாரியை சோதனையிட்டபோது அதில் 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது. தொடர்ந்து அதில் இருந்த 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும், இதுகுறித்து விசாரித்தபோது சென்னை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை கிலோ 6 ரூபாய்க்கு வாங்கி அதனை ஆந்திராவிற்கு கடத்தி கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது. இந்த அரிசியை பாலிஷ் செய்து தமிழத்திற்கு மீண்டும் கொண்டு வந்து கிலோ 40-50 வரை விற்கப்பட இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 5 டன் ரேஷன் அரிசியை பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

Tags : Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்